Translate

சனி, 23 ஜூலை, 2022

 

ஷாம்ஷீனா (22) என்ற இஸ்லாமிய பெண்ணும் காவியா (21) என்ற இந்து பெண்ணும் ஆடை நிறுவனத்தில் பணிபுரியும் போது   நான்கு வருடங்களுக்கு முன்பு முதல் நண்பர்களாக பழகி வருகிறார்கள்.
கர்நாடக மாநிலம் தக்ஷின கன்னடா மாவட்டம்‍, கோத்தாடி மற்றும் ராம்நகர் (20 கீ.மீ தொலைவு) கிராமத்தில் இருவரும் முறையே வசித்து வருகின்றனர் .இருவரது வீட்டாரும் ஒருவருக்கொருவர் நன்கு அறிமுகமாகியிருந்தனர்.





ஜூலை மாதம் 12 தேதி , பக்ரீத் திருநாளின் இரண்டாம் நாள் ஷம்ஷீனா காவியாவை தனது இல்லத்திற்கு பிரியாணி விருந்திற்கு அழைத்தார்.அப்போது இவர்களை பின்தொடர்ந்தது வந்த இந்துத்துவ பாசிச வாதிகளின்  இரு சமூக நட்புறவை சீர்குலைக்கும் திட்டம் அம்பலமானபோது இப்பெண்கள் இவர்களது குடும்பத்தாரும் அதிர்ந்துபோயினர்.

வழக்கமாக காவியாவின் சகோதரர் தான் காவியாவை ஷம்ஷீனா வீட்டிற்கு அழைத்து சென்று விடுவார் . இம்முறை அவருக்கு வேறு பணி இருந்ததால் காவியாவை ஷம்ஷீனா வீட்டிற்கு பாதி வழியிலுள்ள உப்பினன்காடி என்ற இடத்தில் இறக்கிவிட்டு சென்றார்.காவியாவை அழைத்து செல்ல ஷம்ஷீனாவும் அங்கு வந்து சேர்ந்தார் . இருவரும் சேர்ந்து பேருந்தில் ஆத்தூர் என்ற இடத்திற்கு சென்று கோழி இறைச்சி வாங்கி கொண்டு அங்கிருந்து வாடகை ஆட்டோ ஒன்றில் ஷம்ஷீனா இல்லம் நோக்கி புறப்பட்டனர்.செல்லும் வழியில் இவர்களை பின்தொடர்ந்தது ஒரு ஆட்டோ ஒன்று வந்து வருவதை இருவரும் கண்டனர்.ஷம்ஷீனா இல்லத்தை  அடைய ஐந்து நிமிட பயண தூரம் இருக்கும் போது தனக்கு அவசரமாக வேலை இருப்பது கூறி ஆட்டோக்காரர் இவர்களை கீழே இறக்கிவிட்டு சென்றார். இவர்களை பின்தொடர்ந்தது வந்துகொண்டிருந்த ஆட்டோ தொடர்ந்து பின்தொடர்ந்தது கொண்டு வந்தது. இருவரும் ஒரு கடையில் நின்றபோது அங்கே இருந்த நபர் இவர்களை விசித்திரமாக உற்று நோக்கி கொண்டிருந்தார்.
ஷம்ஷீனா இல்லத்தை இவர்கள் சென்றடைந்த போது பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த 20-30 நபர்கள் ஷம்ஷீனா வீட்டிலிருந்து சிறிது தொலைவில் கூடியிருந்தனர். 

மதியம் ஒரு மணி வாக்கில் ஷம்ஷீனா இல்லத்திற்கு காவல்துறையினர் வந்தனர் ( ஒரு பெண் ,இரண்டு ஆண் ) .அவர்கள் ஷம்ஷீனா சகோதரர் ஜூயாத்தை பற்றி விசாரித்தார்கள். ஜூயாத் இங்கு இல்லையேன இருவரும் கூறினர்.

மேலும் உனது சகோதரர் ஜூயாத் ஒரு இந்து பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் என்ற தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது என காவல்துறையினர் ஷம்ஷீனாவிடம் கூறினர் .காவியாவை ஜுயாத் இங்கு அழைத்து வந்துள்ளதாக யாரோ ஒருவர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
நீங்கள் பொய் கூருகிறீர்கள் எங்கே ஜூயாத்தின் ஆட்டோ‌? அவனை வெளியே வரச்சொல்லுங்கள் என காவல்துறையினர் கேட்டனர் . ஜூயாத் பெங்களூரில் தங்கி வேலை பார்ப்பதாகவும் அவன் வீட்டிற்கு வந்து சில மாதங்கள் ஆவதாகவும் ஷம்ஷீனா அவர்களிடம் விளக்கிக் கூறினார்.
காவல்துறையினர் இது போன்ற செயல்களால் பெருங்குழப்பத்தில் இருவரும் நின்றுகொண்டிருந்தனர்.
ஜுயாத் பெங்களூரில் இருக்கிறான் அவனுக்கு ஆட்டோவே ஒட்ட தெரியாது நாங்கள் இருவரும் வாடகை ஆட்டோவில் தான் வீட்டிற்கு வந்தோம். காவியா தனது குடும்பத்தாரின் அனுமதியுடனே இங்கு வந்துள்ளார் என இருவரும் காவல்துறையினரிடம் கூறினர்.
சிவில் உடையில் இருந்த காவல் ஒருவர் நீங்கள் வந்த ஆட்டோவின் ஜன்னல்கள் ஏன் மூடப்பட்டிருந்தது? ஆட்டோவிற்கு நீங்கள் வாடகை பணத்தை தாராமலே வந்துள்ளீர்கள் என கேள்விகளை கேட்டார். மழைக்காலம் என்பதால் ஜன்னல்கள் மூடியிருந்தது .ஆட்டோவிற்கு நாங்கள் வாடகை பணம்‌ தரவில்லையேன்று  கூறுவது பொய்யேன்றும்  இருவரும் பதிலளித்தனர்.
ஷம்ஷீனா ஜுயாத்தை‌ அலைபேசியில் அழைத்து லவுட்ஸ்பீக்கர் வைத்து காவல் துறையினரிடம் கொடுத்தார்.ஜூயாத் தான் ஊரில் இல்லையேன அவர்களிடம் கூறினார். ஒரு மணி நேரம் இப்பேச்சுவார்த்தை தொடர்ந்தது. இந்துத்துவ கும்பலுடன் பேசும்படி ஷம்ஷீனா காவல்துறையினரிடம் கேட்டுக்கொண்டார்.

காவியா தங்களுடன் வர வேண்டுமேன காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர் இதற்கு காவியா , ஷம்ஷீனா மற்றும் அவர்களது குடும்பத்தினரும் எதிர்ப்புதெரிவித்தனர்.காவியாவின் சகோதரர் அவளை அழைத்துச்செல்ல வந்துகொண்டுள்ளார் காவியா அவருடன் செல்வால் என கூறினர்.காவியா இங்கிருந்தால் பிரச்சினை பெரிதாகிவிடும் என்று காவியாவை அவர்கள் தனியார் கார் ஒன்றில் உப்பினன்காடியில் உள்ள ஆதித்யா விடுதிக்கு அழைத்து சென்றனர் . அங்கு காவியா‌ பற்றி விவரங்களை கேட்டு பதிவு செய்து கொண்ட காவல்துறையினர் அவளை புகைப்படம் எடுத்து கொண்டனர்.அவளது சகோதரர் வந்த பின்பு இருவரையும் சேர்த்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
ஏன் என்ன அங்கிருந்து அழைத்து வந்தீர்கள் என காவியா அவர்களிடம் கேட்டபோது .காவியா அங்கிருந்தில் இந்துத்துவ கும்பல்கள் பிரச்சினை செய்வார்கள் என்றும் இவர்களால் காவியாவுக்கும் ஷம்ஷீனா குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு தரமுடியாது என கூறினர்.

இச்சம்பவம் முடிந்த பிறகு காவியாவிற்கு பல எண்களிலிருந்து அழைப்பு வந்ததாகவும் அவை வேறு வேறு பகுதிகளிலிருந்தும் வந்துள்ளது எனவும் சில அழைப்புகள் மங்களூரிலிருந்து வந்துள்ளதாகவும் , பஜ்ரங்தள் அமைப்பை சார்ந்தவர்கள் ஜூலை 13 அன்று அழைத்து தங்களது பெயர்களை காவல்துறைக்கு தெரிவித்தால் எதிர்வினைகள் கடுமையாக இருக்கும் எனவும் மிரட்டியதாக காவியா கூறுகிறார்.மேலும் சிலர் பிரியாணி விருந்திற்காக முஸ்லீம் வீட்டிற்கு சென்றதற்கு தன்னை இழிவுபடுத்தி பேசினர் என் அவர் கூறுகிறார்.

"எனது எண்ணை நான் காவல்துறையினருக்கு மட்டுமே கொடுத்தேன் அது எப்படி இவ்வளவு நபர்களுக்கு பரவியது என எனக்கு தெரியவில்லை....".     _ காவியா

இனிமேல் ஷம்ஷீனா வீட்டிற்கு செல்வதாக இருந்தால் தனது குடும்ப உறுப்பினர் ஒருவருடன் செல்ல வேண்டுமேன காவல்துறையினர் காவியாவிற்கு அறிவுறுத்தியுள்ளனர்.


இச்சம்பவம் குறித்து "  THE WIRE "செய்தி நிறுவனம் காவியா விடம் கேட்டபொழுது .

"இந்த மொத்த சம்பவமும் எங்களுக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவர்களுக்கு (பஜ்ரங்தள்) என் மீது ஏதேனும் சந்தேகம் இருந்தால் அவர்கள் நேரடியாக என்னிடமே கேட்டிருக்கலாம் அதை விடுத்து இவ்வளவு பெரிய பிரச்சனையை செய்திருக்கிறார்கள்.காவல்துறையினர் என்தோழியின்‌ சகோதரரை பற்றி விசாரித்து கொண்டிருக்கிறார்கள் மேலும் அவர்கள் ஜூயாதை தேடிகெண்டிருப்பது போது தோன்றுகிறது. ஒரு போதும் வன்முறையாளர்கள் எங்களது நட்பை வைத்து வெறுப்பரசியல் செய்து வெற்றி பெறுவதை நான் விடமாட்டேன்"
நான் அவர்கள் வீட்டிற்கு கடந்த பக்ரீத் திருநாளன்றும் சென்றேன்.எனக்கோ அவளுக்கோ சாதிய மத பிளவுகளில் நம்பிக்கை இல்லை.நான் அவளது வீட்டிறகு தொடர்ந்து செல்வேன் அவளின் குடும்பத்தினர் என்னை எப்போதும் அன்புடன் வரவேற்பார்கள் .எனது சாகோதரி  கற்பமாக உள்ளார் அவர் ஷம்ஷீனாவிடம் பிரியாணி கேட்டார் ஆகையால் ஷம்ஷீனா எனக்கு பிரியாணி விருந்து கொடுக்க அழைத்தாள்.
ஷம்ஷீனா குடும்பத்தினர் இந்துத்துவ அமைப்புகள் மீது வழக்கு தொடுத்துள்ளனர் ஆனால் காவல்துறையினர் அவ்வழக்கை ஏற்க மறுத்து இந்துத்துவ அமைப்புகள் பொய்யான தகவல்களின் அடிப்படையிலே ஷம்ஷீனா வீட்டின் முன்பு திரண்டனர் என கூறியுள்ளனர்.
    "The wire கடபா காவல்நிலை துணை ஆய்வாளர் அஞ்சப்ப ரெட்டியை தொடர்புகொண்டபோது இச்சம்பவம் குறித்து அலைபேசியில் விளக்கமளிக்கமுடியாது என கூறினார்".

"இந்த வன்முறை சம்பவம் திட்டமிட்டு எங்களது குடும்பம் மீது  நடத்தப்பட்டது . ஜுயாத் பிஜேபிக்கு எதிரான பதிவுகளை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதால் அவரை குறிவைத்தே இந்த நிகழ்வை அறங்கேற்றியுள்ளனர்"
        _     ஷம்ஷீனா
The wire ஜுயாத்தை தொடர்புகொண்டபோது , "எனக்கு என்ன நேருமோ என்பதை குறித்து கவலை கொள்கிறேன் .நான் ஊருக்கு சென்றால் பஜ்ரங்தள் அமைப்பினர் என்னை சும்மா விடமாட்டோம் என பேசிக்கொள்வதாக எனது சாகோதரி சொல்கிறார்.நான் சமீபகாலமாக பிஜேபியின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டேன்,என் மீது இந்துத்துவ அமைப்புகள் வழக்கு தொடரவும்‌ பார்த்தார்கள் அது பயனளிக்காததால் இது போன்ற பொய்யான குற்றச்சாட்டுகளை என்மீது சுமத்த முயற்ச்சிக்கின்றனர். இச்சம்பவம் நடைபெறும் போது நான் அங்கு இருந்திருந்தால் அச்சம்பவம் வேறு மாதிரி முடிந்திருக்கும்". என ஜுயாத் கூறினார்.

கடலோர கர்நாடகா பகுதியில் உள்ள இந்துத்துவ அமைப்புகள் இரு சமூக நட்புறவுகளின் மீது மிகுந்த வெறுப்புடன்‌ உள்ளனர். கடந்த காலங்களில் காவியா ஷம்ஷீனா நட்புறவு மிகவும் சாதாரணமாக இருந்துவந்தது ஆனால் இந்துத்துவ அமைப்புகளின்  மதவெறுப்பு அரசியல் உச்சம் பெற்றபின் இது போன்ற சாதாரண விசயம் கூட அரசியல் ரீதியாக பார்க்கப்படுகிறது .

_ MOHAMMED IRSHAD (independent journalist )
THE WIRE ,JULY 18/2022

Illustration: Pariplab Chakraborty

மொழிபெயர்ப்பு : கோ 




சனி, 16 ஜூலை, 2022

 SRI LANKA ,



    JVP leader Anura Kumara Dissanayake will contest for the Interim Presidency in the upcoming Parliament vote, JVP announced on sat 16/07/22