Translate

சனி, 3 ஜூலை, 2021

 நேற்று இரவு ஆக்கிரமிப்பு இஸ்ரேல் ராணுவம் காஸா பகுதியில் வான்வழி தாக்குதல் நடத்தியது.கடந்த மே மாதம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில்  279 பாலஸ்தீனியர்கள்(69 குழந்தைகள் உட்பட) கொல்லப்பட்டனர்.சர்வதேச அழுத்ததிற்கு பின்பு கடந்த மே 10ம்தேதி போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யபட்டது குறிப்பிடதக்கது. 

 வெனிசுலா அதிபர் நிகோலஸ் மாதுரோவையும் அந்நாட்டு முக்கிய ராணுவ அதிகாரிகளையும் கொலை செய்ய சதி நடப்பதாக மாதுரோ கூறியுள்ளார்.அமெரிக்காவின் தென்னக பிராந்திய கமாண்டர் கடந்த சில நாட்களாக பிரேசில் மற்றும் கொலம்பியாவில் தங்கி தமக்கேதிரான சதி திட்டத்தை தீட்டுவதாக 
நிகோலஸ் மதுரோ குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 2018 ஆண்டு டிரம்ப் ஆட்சியின் போது நிகோலஸ் மதுரோவின் மீது கொலை முயற்சி நடைபெற்றது எதிர்பாரா விதமாக மதுரோ அதிலிருந்து தப்பித்தார். வெனிசுலாவுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைவிதித்துள்ளது இதனால் அந்நாட்டின் பொருளாதாரம் வெகுவாக பாதித்துள்ளது. இந்நிலையில் தான் சோசலிச நிகோலஸ் மதுரோ அரசை தூக்கியேறிய ஏகாதிபத்திய சக்திகள் திட்டமிட்டுள்ளது. 

திங்கள், 21 ஜூன், 2021

 கடந்த ஞாயிற்றுக்கிழமை 20/06/2021 அன்று அதிகாலை 4:30 மணிக்கு திரிபுரா மாநிலத்தின் கோவாய் (Khowai) மாவட்டத்தில் மூன்று நபர்கள் Jayed Hossain (30), Billal Miah (28) and Saiful Islam (18) ஒரு வாகனத்தில் 5  கால்நடைகளை ஏற்றி அகர்தலா நோக்கி சென்று கொண்டிருந்தனர் . இவர்களை கண்ட நமஜோய் பரா (Namajoy Para)  என்ற கிராமத்து மக்கள் சிலர் கால்நடை திருடர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் அவர்கள் அனைவரையும் மிகக்கடுமையாக தாக்கியுள்ளனர். ஒருவர் மட்டும் தப்பி செல்ல முயன்றார் அவரையும் சிறிது தூரத்தில் வேறொரு பிரிவினர் மிகக் கடுமையாக தாக்கியுள்ளனர் . சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அவர்கள் மூவரையும் சிகிச்சைக்காக அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் பின்பு அங்கிருந்து அகர்தலா அரசு மருத்துவ கல்லூரிக்கு அழைத்து சென்றனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர் அவர்கள்  இறந்துவிட்டதாக கூறினார். இந்த வழக்கு கல்யாண்பூர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு எடுத்துகொள்ள பட்டுள்ளது.  இந்த மாநிலத்தில் பிஜேபி அரசாங்கம் ஆட்சியிலிருப்பது குறிப்பிடதக்கது.